< Back
கிரிக்கெட்
ஆசிய விளையாட்டு: இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு: இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்

தினத்தந்தி
|
7 Oct 2023 3:21 PM IST

ஆசிய விளையாட்டின் ஆண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல, ஆப்கானிஸ்தான் அணி, தனது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதன்படி, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், ரேங்க் அடிப்படையில் இந்திய அணிக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

மேலும் செய்திகள்