< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- இலங்கை இன்று மோதல்
கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- இலங்கை இன்று மோதல்

தினத்தந்தி
|
12 Sept 2023 5:45 AM IST

தொடர்ச்சியாக 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வீறுநடை போடும் இலங்கை அதே உத்வேகத்துடன் அடியெடுத்து வைக்கிறது.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதுகின்றன.

மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முந்தைய நாள் இரவு 11 மணி வரை விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் ஓய்வின்றி உடனடியாக களம் இறங்க வேண்டி உள்ளது. சோர்வின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

இதே போல் சூப்பர்4 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்த தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். தொடர்ச்சியாக 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வீறுநடை போடும் இலங்கை அதே உத்வேகத்துடன் அடியெடுத்து வைக்கிறது.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அங்கு இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்