< Back
கிரிக்கெட்
யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: தென்ஆப்பிரிக்க வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்
கிரிக்கெட்

யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: தென்ஆப்பிரிக்க வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்

தினத்தந்தி
|
3 Jun 2022 8:01 PM GMT

டெல்லி வந்தடைந்த தென்ஆப்பிரிக்க அணியினர் அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று பயிற்சியை தொடங்கினர்.

புதுடெல்லி,

5 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியினர் இந்தியா வந்துள்ளனர். இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் வருகிற 9-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது.

டெல்லி வந்தடைந்த தென்ஆப்பிரிக்க அணியினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை என்பதை குறிக்கும் 'நெகட்டிவ்' முடிவு வந்ததை அடுத்து தென்ஆப்பிரிக்க அணியினர் அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று பயிற்சியை தொடங்கினர்.

தப்ரைஸ் ஷம்சி, கேஷவ் மகராஜ், சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் மார்க்ராம் ஆகியோர் சுழற்பந்து வீசி தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு பயிற்சியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிரடியில் கலக்கிய டேவிட் மில்லர் விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்கு சென்று உள்ளார். அவர் விரைவில் அணியினருடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்