< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து மோதும்: மிதாலி ராஜ் ஆரூடம்
|2 Nov 2022 2:22 AM IST
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
மும்பை,
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் எந்த அணிகள் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், 'குரூப்2-ல் இருந்து இந்தியா, தென்ஆப்பிரிக்காவும், குரூப்1-ல் இருந்து நியூசிலாந்தும் அரைஇறுதிக்கு தகுதி பெறும். குரூப்1-ல் இரண்டாவது அணியாக அரைஇறுதிக்கு நுழைவது யார்? என்பதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே கடும் போட்டி நிலவும்.
இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் சந்திக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை' என்றார்.