இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; கே.எஸ்.பரத்திற்கு ஓய்வு வழங்க வாய்ப்பு - புது விக்கெட் கீப்பர் யார் தெரியுமா?
|இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்திற்கு இந்திய நிர்வாகம் ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிஷப் பண்ட் காயமடைந்த பின்னர் கடந்த 2023-ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான கே.எஸ் பரத் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 ரன்கள் சராசரி உடன் 221 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதோடு இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய முதல் இரண்டு போட்டியிலும் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கே.எஸ்.பரத்திற்கு ஓய்வு வழங்க உள்ளதாகவும் அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராக அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.