டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள் - குப்தில் சாதனையை சமன்செய்தார் ரோகித் சர்மா
|டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 172 சிக்சர்கள் அடித்து மார்ட்டின் குப்திலின் சாதனையை ரோகித் சர்மா சமன்செய்தார்.
லக்னோ,
டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 172 சிக்சர்களுடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் குப்தில் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 171 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா 9 பந்துகளில் 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்து 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து ரோகித் சர்மா 172 சிக்சர்களுடன் டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த மார்ட்டின் குப்திலின் சாதனையை சமன்செய்தார்.
தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் மோர்கன் (120 சிக்சர்கள்), ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (117 சிக்சர்கள்) ஆகியோர் உள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசி முதலிடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.