டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
|சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
புதுடெல்லி,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.
ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டது. இந்த நிலையில், இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே அணியில் இடம் பெற்றுள்ளனர்.
15 பேர் கொண்ட இந்திய அணி விபரம்:
1.ரோகித் சர்மா (கேப்டன்)
2.ஜெய்ஸ்வால்
3.விராட் கோலி
4.சூர்யகுமார் யாதவ்
5.ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
6.சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
7.ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்)
8.சிவம் துபே
9.ரவீந்திர ஜடேஜா
10.அக்சர் படேல்
11.குல்தீப் யாதவ்
12.யுஸ்வேந்திர சாஹல்
13.அர்ஷ்தீப் சிங்
14.ஜஸ்பிரித் பும்ரா
15.முகமது சிராஜ்
மாற்று வீரர்கள் பட்டியல்:
1.சுப்மன் கில்
2.ரிங்கு சிங்
3.கலீல் அகமது
4.ஆவேஷ் கான்