< Back
கிரிக்கெட்
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

கோப்புப்படம்

கிரிக்கெட்

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

தினத்தந்தி
|
13 Jan 2023 11:37 PM IST

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்ற நிலையில் நாளை மறுநாள் மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

இந்த சூழலில் இலங்கை தொடருக்கு பின், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மாவும், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரிதிவி ஷா நீண்ட நாட்களுக்கு பிறகு இடம்பிடித்துள்ளனர். இளம்வீரர்கள் ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்முறையாக டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுலும் அணியில் இடம்பெறவில்லை. குடும்ப பொறுப்புகள் காரணமாக அக்சர் படேலும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன் (கீப்பர்) , விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பரத் (கீப்பர்) , ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

மேலும் செய்திகள்