< Back
கிரிக்கெட்
இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதும் டெஸ்ட் போட்டி: சென்னை சேப்பாக்கத்தில் நாளை தொடக்கம்
கிரிக்கெட்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதும் டெஸ்ட் போட்டி: சென்னை சேப்பாக்கத்தில் நாளை தொடக்கம்

தினத்தந்தி
|
27 Jun 2024 5:34 PM IST

ஜூலை 1- ந் தேதி வரை இந்தப் போட்டி 4 நாட்கள் நடக்கிறது.

சென்னை,

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஜூலை 1- ந் தேதி வரை இந்தப் போட்டி 4 நாட்கள் நடக்கிறது.

இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக காணலாம். 'சி, டி, இ', மற்றும் 'ஐ,ஜே', 'கே' கேலரிகளின் கீழ் அளவில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் ஜூலை 5, 7 மற்றும் 9-ந் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.

மேலும் செய்திகள்