< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
2 முறை நிறுத்தப்பட்ட இந்தியா-தென்னாப்பிரிக்கா ஆட்டம்.: மீம்ஸ்களால் விமர்சிக்கும் நெட்டிசன்கள்
|3 Oct 2022 11:38 AM IST
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி நடைபெறும் போது இருமுறை ஆட்டம் நிறுத்தப்பட்டது.
கவுகாத்தி,
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்ற கவுகாத்தி மைதான நிர்வாகிகளையும் பிசிசிஐயையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
முதலில் மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட்டது. அடுத்து மைதானத்தின் மின்விளக்கு பழுதானதால் சுமார் 20 நிமிடங்களுக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதனை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பறக்கவிட்டுள்ள ரசிகர்கள், மைதானம் முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர்.