< Back
கிரிக்கெட்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்; டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற நபர்
கிரிக்கெட்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்; டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற நபர்

தினத்தந்தி
|
31 Oct 2023 7:07 PM IST

இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கொல்கத்தாவில் கூடுதல் விலைக்கு விற்ற நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கொல்கத்தா,

நடப்பு ஆண்டில் ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையேயான போட்டி ஒன்று நவம்பர் 5-ந்தேதி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நடைபெற உள்ளது.

இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், ரூ.2,500 மதிப்பிலான டிக்கெட்டுகளை நபர் ஒருவர் ரூ.11 ஆயிரத்திற்கு விற்றுள்ளார்.

இதுபற்றிய ரகசிய தகவல் போலீசாருக்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட கொல்கத்தா நகர போலீசார் அங்கித் அகர்வால் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து அந்நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்