உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
|உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என முன்னாள் வீரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ள இந்தியா இந்த எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றுவதுடன் உலக டெஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் ஆர்வமாக உள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலக கோப்பை தொடரும் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவதுப்,
இது அனைத்தும் நிச்சயம் மாறும். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை இந்த ஆண்டு வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த இரண்டுக்கும் இடையே ஆசிய கோப்பை தொடரும் உள்ளது. அந்த பட்டமும் இந்தியாவுக்கு திரும்பினால் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.