< Back
கிரிக்கெட்
ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் - டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த இந்தியா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் - டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த இந்தியா

தினத்தந்தி
|
10 Jun 2024 11:21 AM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதாவது டி20 உலகக்கோப்பையில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. அந்த வகையில் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் பாகிஸ்தான் (வங்காளதேசத்திற்கு எதிராக 6 வெற்றி), இலங்கை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 6 வெற்றி) அணிகள் உள்ளன.

டி20 உலகக்கோப்பையில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணி;

7 - இந்தியா - பாகிஸ்தான்

6 - பாகிஸ்தான் - வங்காளதேசம்

6 - இலங்கை - வெஸ்ட் இண்டீஸ்

மேலும் செய்திகள்