< Back
கிரிக்கெட்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி..?
கிரிக்கெட்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி..?

தினத்தந்தி
|
14 Aug 2022 9:53 PM IST

நவம்பரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை,

இந்தியாவில் பழமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியன் உள்ளிட்ட சில பகுதிகள் இடிக்கப்பட்டு மீண்டும் புது பொலிவுடன் தயாராகி வருகிறது. விரைவில் ஸ்டேடியம் தயார் நிலைக்கு வர இருக்கிறது.

இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் இந்த மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதே போல அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி இங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் உள்ளூர் போட்டியான துலீப் டிராபி போட்டி செப்டம்பர் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது.

இது தவிர ரஞ்சி டிராபி போட்டியின் சில ஆட்டங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்