< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு..!
|1 July 2022 5:16 PM IST
இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது
பர்மிங்காம்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது .தொடக்கத்தில் கில் 17ரன்களிலும் ,புஜாரா 13ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி 2 விக்கெட்டுக்களை இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.இந்திய அணியில் விஹாரி14 ரன்னும் ,விராட் கோலி 1ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர் .