< Back
கிரிக்கெட்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த இந்தியா...!

image courtesy; twitter/ @BCCI

கிரிக்கெட்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த இந்தியா...!

தினத்தந்தி
|
18 Jan 2024 1:47 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

பெங்களூரு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா, எதிரணியை ஒயிட் வாஷ் செய்வது இது 9-வது முறையாகும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களை ஒய்ட் வாஷ் செய்து வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை நொறுக்கியுள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் பாகிஸ்தான் 8 டி20 தொடர்களில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்ததே முந்தைய சாதனையாகும். தற்போது அதனை தகர்த்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்