< Back
கிரிக்கெட்
இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் இன்று தொடக்கம்

Image Courtacy: BCCIWomenTwitter

கிரிக்கெட்

இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
21 Dec 2023 4:29 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றிய இந்திய அணி அதே வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.

மும்பை,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றிய இந்திய அணி அதே வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஒரு போதும் வீழ்த்தியதில்லை. அவர்களுக்கு எதிராக 10 டெஸ்டில் மோதி அதில் 4-ல் தோல்வியும், 6-ல் டிராவும் கண்டுள்ளது.

தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் அவர்களின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு இதைவிட சிறந்த வாய்ப்பு நமது வீராங்கனைகளுக்கு கிடைக்காது. சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், பேட்டர்கள் மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரின் செயல்பாட்டை பொறுத்தே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அமையும்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்