இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் : நாக்பூர், டெல்லி பிட்ச் எப்படி ? - ஐசிசி மதிப்பீடு
|இந்த விவகாரம் குறித்து ஐசிசி நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி கண்டு முன்னிலை பெற்றுள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்தியாவின் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைப்பு குறித்து விவாதித்து வருகின்றன.இந்த தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை ஆஸ்திரேலிய அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐசிசி நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற டெல்லி மற்றும் நாக்பூர் பிட்ச்-கள் இரண்டுமே சுமாரான ஆடுகளம் தான் ஐசிசி தெரிவித்திருக்கிறது.
மேட்ச் நடுவரான ஜிம்பாப்வேவை சேர்ந்த ஆண்டி பைக்ராப்ட் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த ரேட்டிங் கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறி வருகிறது.
இது குறித்து ஐசிசி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.