< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை இறுதிபோட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

Image Courtesy: AFP  

கிரிக்கெட்

உலகக்கோப்பை இறுதிபோட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
4 Nov 2022 12:28 PM IST

உலகக்கோப்பை இறுதிபோட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கணித்துள்ளார்.


8வது 20 ஓவர் உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக் முன்னேறும்.

இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயும் அரைஇறுதிக்கு செல்ல போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்க்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இறுதிப்போட்டி நடைபெறும் மெல்போர்னுக்கு யார் செல்வார்கள் என்று யாருக்கு தெரியும்?. ஆனால், ஆஸ்திரேலியா தனது பிரிவில் இருந்து அரை இறுதிக்கு செல்லும். தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் என்று நம்புகிறேன்.

நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன். இது ஒரு பெரிய விளையாட்டு என்பதை உணர்ந்து உங்களுக்கும், மற்றவர்களுக்கும் எவ்வளவு அதிகமான திறமையை வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்தினால் சிறப்பாக விளையாடுவீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்