< Back
கிரிக்கெட்
இந்தியா- ஆஸி. அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..!
கிரிக்கெட்

இந்தியா- ஆஸி. அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..!

தினத்தந்தி
|
17 March 2023 12:06 PM IST

அடுத்த 3 நாட்களில் கடலோர ஆந்திராவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

விசாகப்பட்டிணம்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி விசாகபட்டினத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்த போட்டியானது மழையால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இதன் காரணமாக போட்டி மழையால் பாதிக்கப்படாமல் முழுவதுமாக நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்