< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இஷான் கிஷன் எந்த இடத்தில் களம் இறங்குவார் - புதிய தகவல்...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஆசிய கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இஷான் கிஷன் எந்த இடத்தில் களம் இறங்குவார் - புதிய தகவல்...!

தினத்தந்தி
|
30 Aug 2023 6:38 AM IST

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

கராச்சி,

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கே.எல்.ராகுல் முதல் இரு ஆட்டங்களில் ஆட மாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று தெரிவித்தார். இதனால் அவருக்கு பதிலாக கிட்டத்தட்ட இஷான் கிஷன் களம் இறங்குவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் அவ்வாறு இஷான் கிஷன் களம் இறக்கப்பட்டால் அவர் எந்த இடத்தில் விளையாடுவார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. அதன்படி தற்போது கிடைத்த புதிய தகவலின் படி இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் ஐந்தாவது இடத்திலே விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆலூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் இந்திய அணியின் பின் வரிசை பேட்ஸ்மேன்களான ஹர்த்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடனே இணைந்து இஷான் கிஷன் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அணி நிர்வாகம் அவரை மிடில் ஆர்டரில் களமிறக்கவே விரும்புவதாக தெரிகிறது.

ஹர்த்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா என பின்வரிசை பேட்ஸ்மேன்களுடனே பயிற்சியினை மேற்கொண்டு உள்ளதால் இஷான் கிஷன் ஐந்தாவது இடத்திலேயே களம் இறங்குவார் என்று உறுதியாக கூறப்படுகிறது.இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்