< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் மோசமான சாதனை படைத்த பும்ரா

கோப்புப்படம் 

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் மோசமான சாதனை படைத்த பும்ரா

தினத்தந்தி
|
27 Sept 2022 3:54 PM IST

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஐதராபாத்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயாப டி20 தொடரின் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா இரண்டாவது போட்டியின் போது அற்புதமாக பந்து வீசி இருந்தார்.

ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் அவர் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தது அவருடைய பவுலிங் குறைபாட்டை வெளிக்காட்டியது. அதோடு டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் பலமே ரன்களை கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான். ஆனால் இதற்கு மாறாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இந்த போட்டியில் பந்து வீசிய அவர் விக்கெட்டை வீழ்த்தாமல் 50 ரன்களை வாரி வழங்கினார். இதுவே டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2016-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அதன் பின்னர் தற்போது தான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதோடு டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர் எந்த போட்டியிலும் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்தது கிடையாது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்