< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை: பி.சி.சி.ஐ. அறிவிப்பு
|9 March 2024 4:34 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
புதுடெல்லி,
இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்றது.இதில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.