இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் மன்கட் ரன் அவுட்டை செய்யுங்கள்- ஆஸ்திரேலிய வீராங்கனை கிண்டல்
|ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மன்கட் ரன் அவுட் தொடர்பாக இங்கிலாந்து அணியை கிண்டல் செய்துள்ளார்.
சிட்னி,
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா செய்த ரன்-அவுட்டை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் மன்கட் ரன்-அவுட் விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஐசிசி விதிக்கு உட்பட்டு மன்கட் ரன் அவுட் செய்யப்பட்டதால், தீப்தி சர்மாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும் பலரும் இதை விமர்சித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி மான்கட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் மன்கட் முறை சரியானது அல்ல. அதனை யாரும் செய்ய வேண்டாம். இப்படி நீங்கள் மன்கட் முறையில் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க நினைத்தால் இங்கிலாந்திடம் மட்டும் செய்யுங்கள் என்று பதிலளித்துள்ளார். மேலும் தீப்தி சர்மா குறித்தும் அவர் பாராட்டி இருக்கிறார்.
கிரிக்கெட் போட்டிகளில் பொதுவாக இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எப்போதும் கடுமையான போட்டி நிலவும். இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதிகமுறை வார்த்தை மோதல் நடந்துள்ளது. அதனால்தான் மன்கட் விவகாரத்தில் இங்கிலாந்தை எலிஸ் பெர்ரி கிண்டல் செய்து உள்ளார்.