இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகள் மோதினால்... மனம் திறந்த டிராவிஸ் ஹெட்
|டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
நியூயார்க்,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதி சுற்றுக்கு ஐசிசி தரவரிசையில் முன்னனியில் உள்ள அணிகளே தகுதி பெறும்.
இந்த நிலையில், இறுதிப்போட்டியில் மோதும் அணிகள் குறித்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
'டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதினால் நன்றாக இருக்கும். இந்தியாவில் உள்ள அனைவரும் அதை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். கடந்த இரண்டு உலக போட்டிகளில் (50 ஓவர் மற்றும் டெஸ்ட்) அவர்களை தோற்கடித்து இருக்கிறோம். அதனால் பழிவாங்க விரும்புவார்கள். அது நடப்பதற்கு நாங்களும், அவர்களும் இறுதிப்போட்டியை எட்டுவோம் என்று நம்புகிறேன். அதன் பிறகு என்ன முடிவு வரும் என்பதை பார்க்கலாம்' என்றார்.