சென்னை அணி பிளேஆப் சுற்றுக்குள் சென்றால்... ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்.!
|சென்னை அணியின் முக்கிய வீரர் லீக் சுற்றுடன் தாயகம் திரும்ப உள்ளார்.
சென்னை,
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் லீக் போட்டிகள் அனைத்து முடிவடைகிறது. இதுவரை டெல்லி, ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், மற்ற அணிகள் போட்டியில் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், 13 போட்டிகள் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வியுடன், 1 (முடிவில்லை) 15 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போதுவரை 2வது இடத்தில் உள்ளது.
தனது கடைசி போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால், பிளே ஆப் சுற்றை உறுதிசெய்துவிடும். ஒருவேளை தோற்றால், சில அணிகளின் வெற்றி, தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் உருவாகும்.
தற்போது வரையில் சென்னை அணிக்கு பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. இதனிடையே சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் போது, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவலாக அணியின் முக்கிய வீரர் தாயகம் திரும்ப உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்தவுடன், தாயகம் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக ஸ்டோக்ஸ் தாயகம் திரும்புகிறார்.
ஒருவேளை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால், அந்த போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் ஆட மாட்டார். ஏலத்தில் பதினாறே கால் கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.