< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வீரர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் லாராவின் சாதனையை முறியடிப்பார் -  மைக்கேல் கிளார்க்

கோப்புப்படம்

கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வீரர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் லாராவின் சாதனையை முறியடிப்பார் - மைக்கேல் கிளார்க்

தினத்தந்தி
|
9 Jan 2024 9:32 AM IST

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி முழுமையாக கைப்பற்றியது.

மெல்போர்ன்,

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடருடன் ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அவருடைய இடத்தை நிரப்பப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் அணி நிர்வாகம் விரும்பினால் தாம் துவக்க வீரராக விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் சிறப்பாக விளையாடி பிரைன் லாராவின் 400 ரன்கள் உலக சாதனையை முறியடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் க்ளார்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஒருவேளை தொடக்க வீரராக ஸ்மித் விளையாட விரும்பினால் அதை செய்ய ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன். கம்மின்ஸ் சமீபத்தில் கொடுத்த பேட்டியை வைத்து பார்க்கும்போது இது சிறிய மாற்றமாக இருக்கலாம். அதே சமயம் ஸ்மித் மிடில் ஆர்டரில் தொடர்ந்து விளையாடினால் டேவிட் வார்னர் இடத்தில் கேமரூன் கிரீன் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. அல்லது ஸ்மித் தொடக்க வீரராக விளையாடினால் கேமரூன் கிரீன் 4 அல்லது 6வது இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஸ்மித் அபாரமான வீரர். அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடினால் அடுத்த 12 மாதங்களில் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக வருவார். அங்கே அவர் பிரைன் லாராவின் 400 ரன்கள் சாதனையையும் உடைத்தால் ஆச்சரியப்படாதீர்கள். ஏனெனில் அந்தளவுக்கு அவர் திறமை வாய்ந்தவர். தொடக்க ஆட்டக்காரராக விளையாடும்போது நாள் முழுவதும் விளையாடக்கூடிய வாய்ப்பு அவருக்கு அதிகமாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்