< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
நீ இல்லையென்றால் நானில்லை - மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கோலி
|1 May 2024 6:32 PM IST
விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
புதுடெல்லி,
கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு வாமிகா என்ற பெண் குழந்தையும், அகாய் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் அனுஷ்கா சர்மா இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " உன்னைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் நான் முற்றிலும் தொலைந்து போயிருப்பேன். பிறந்த நாள் வாழ்த்துகள் என் அன்பே. நமது உலகத்தின் வெளிச்சம் நீ. நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.