< Back
கிரிக்கெட்
ஐசிசியின் புதிய விதிமுறை: இன்று நடைபெறும் போட்டியில் சோதனை முயற்சி அமல்!

image courtesy: ICC

கிரிக்கெட்

ஐசிசியின் புதிய விதிமுறை: இன்று நடைபெறும் போட்டியில் சோதனை முயற்சி அமல்!

தினத்தந்தி
|
12 Dec 2023 5:27 AM IST

பார்படோசில் இன்று தொடங்கும் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் தொடரில் புதிய விதிமுறை பரிசோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), விதிமுறையில் சமீபத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. இதில் வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் ஒரு ஓவர் முடிந்ததும் அடுத்த ஓவரை 60 வினாடிக்குள் வீச வேண்டும். இந்த நேரத்தை 3 முறை மீறினால் பந்து வீசும் அணியை தண்டிக்கும் விதமாக பேட்டிங் அணிக்கு 5 ரன் போனசாக வழங்கப்படும்.

பரிசோதனை முயற்சியாக இந்த விதிமுறை பார்படோசில் இன்று தொடங்கும் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் தொடரில் அமல்படுத்தப்படுகிறது. இந்த விதிமுறை டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை நடைபெறும் ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் ஏறக்குறைய 59 ஆட்டங்களில் பரிசோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்