< Back
கிரிக்கெட்
ஐசிசி-யின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருது - பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்ற நெதர்லாந்து வீரர்..!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

ஐசிசி-யின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருது - பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்ற நெதர்லாந்து வீரர்..!

தினத்தந்தி
|
7 Aug 2023 3:14 PM IST

ஐசிசி-யின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் நெதர்லாந்து வீரர் இடம் பெற்றுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்தின் ஜேக் க்ராவ்லி, கிறிஸ் வோக்ஸ் மற்றும் நெதர்லாந்தின் பாஸ் டீ லீட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர், எல்லீஸ் பெர்ரி, இங்கிலாந்தின் நேட் ஸ்கீவர் பிரண்ட் ஆகியோர் பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும்.

மேலும் செய்திகள்