< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டியின் அட்டவணையை வெளியிட்டது ஐசிசி...!
|31 Aug 2022 9:57 PM IST
சர்வதேச மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், தகுதிச்சுற்று போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், சர்வதேச மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், தகுதிச்சுற்று போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 18 முதல் 25 ஆம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 'ஏ' பிரிவில் வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. அதேபோல குரூப் 'பி' பரிவில் தாய்லாந்து, ஜிம்பாப்வே, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இரு பிரிவுகளிலும் முதலிடத்தை பிடிக்கும் இரண்டு அணிகள், உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.