ஐசிசி மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை: 2-வது இடத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா
|இதில் 732 புள்ளிகளுடன் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார்
மகளிர் டி20 போட்டியின் பந்து வீச்சாளர் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் 732 புள்ளிகளுடன் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார். நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.முதல் இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.
Deepti Sharma, Nonkululeko Mlaba close in on top spot
— ICC (@ICC) January 31, 2023
Laura Wolvaardt rises
Lots of movement in the top 10 of @MRFWorldwide ICC Women's T20I Player Rankings
Details https://t.co/gkvdY4890o pic.twitter.com/DiCS3omuyW