< Back
கிரிக்கெட்
ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசை; நம்பர் 1 இடத்தை இழந்த இந்தியா...!

Image Courtesy: @BCCI

கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசை; நம்பர் 1 இடத்தை இழந்த இந்தியா...!

தினத்தந்தி
|
5 Jan 2024 3:55 PM IST

ஐசிசி டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

துபாய்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி (117 புள்ளி) தற்போது இரண்டாம் இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா (118 புள்ளி) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததாலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்ததன் மூலமாக, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இப்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

டெஸ்ட் அணிகள் தரவரிசையில் 3 முதல் 5 இடங்களில் முறையே இங்கிலாந்து (115 புள்ளி), தென் ஆப்பிரிக்கா (106 புள்ளி), நியூசிலாந்து (95 புள்ளி) அணிகள் உள்ளன.

மேலும் செய்திகள்