ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம்
|இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
துபாய்,
ஐசிசி இன்று சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடியதால் அவர் 883 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் 2வது இடத்திலும் , ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 3வது இடத்தில் உள்ளனர்.
இந்திய சார்பில் ரிஷப் பண்ட் 10வது இடத்தில் உள்ளார்.பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் முதலிடத்திலும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும் நீடிக்கின்றனர்.
We have a new No.1 Test batter
— ICC (@ICC) June 21, 2023
The latest @MRFWorldwide ICC Men's Player Rankings have thrown up a big surprise https://t.co/XvrnVBPsCq