< Back
கிரிக்கெட்
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேற்றம்
கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
22 Feb 2023 2:51 PM IST

டெஸ்ட் போட்டியில்சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் ,ஆல் ரவுண்டர்களின் தரவரிசை வெளியிட்டுள்ளது.

ஐசிசி, இன்று டெஸ்ட் போட்டியில்சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் ,ஆல் ரவுண்டர்களின் தரவரிசை வெளியிட்டுள்ளது.

அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் . நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் . ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார்.

மேலும் பேட் கம்மின்ஸ் 3வது இடத்தில உள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் , .2 வது இடத்தில் அஸ்வின் உள்ளனர் . அக்சர் படேல் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார்.

பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் , ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார் .இந்திய அணியின் ரிஷாப் பண்ட் 6 வது இடத்திலும் ரோகித் சர்மா 7 வது இடத்திலும் இடத்திலும் உள்ளனர் .


மேலும் செய்திகள்