ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை; இந்திய இளம் வீரர்கள் முன்னேற்றம்
|டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் வீரர்களான கில், ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் கண்டுள்ளனர்.
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வில்லியம்சன் முதலிடத்தில் தொடருகிறார். இதில் இந்தியா தரப்பில் விராட் கோலி (9-வது நிலை) மட்டுமே டாப் 10 இடத்திற்குள் உள்ளார். இதில் இந்திய இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 12-வது இடத்திலும் (3-இடம் முன்னேற்றம்), கில் 31-வது இடத்திலும் (4-இடம் முன்னேற்றம்) மற்றும் ஜூரெல் 69-வது இடத்திலும் (31 இடம் முன்னேற்றம்) உள்ளனர்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். இதில் ஜோ ரூட் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.