< Back
கிரிக்கெட்
ஐசிசி டி20 தரவரிசை: பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்- ராகுல், பாண்டியா முன்னேற்றம்
கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை: பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்- ராகுல், பாண்டியா முன்னேற்றம்

தினத்தந்தி
|
21 Sept 2022 4:37 PM IST

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் லோகேஷ் ராகுல் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

மொகாலி,

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆண்களுக்கான ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் லோகேஷ் ராகுல் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

மொகாலியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

சூர்யகுமார் யாதவ் 46 ரன்கள் (25 பந்துகள்), லோகேஷ் ராகுல் 55 ரன்கள் (35 ரன்கள்) என சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தனர். இதை தொடர்ந்து ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் யாதவ் (780 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (825 ரேட்டிங் புள்ளி) உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் உள்ளார். லோகேஷ் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14-வது இடத்திலும் கோலி 16-வது இடத்திலும் அங்கம் வகிக்கின்றனர்.

அதே போல் டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அவர் தற்போது 180 ரேட்டிங் புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சாகிப் அல் ஹசன் (வங்காள தேசம்) , 2-வது இடத்தில் முஹமது நபி (ஆப்கானிஸ்தான்) 3-வது இடத்தில் மொயின் அலி (இங்கிலாந்து) உள்ளனர்.

மேலும் செய்திகள்