< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி டி20 தரவரிசை; பேட்டிங் பட்டியலில் முதலிடத்தில் தொடரும் சூர்யகுமார் யாதவ்

கோப்புப்படம்

கிரிக்கெட்

ஐ.சி.சி டி20 தரவரிசை; பேட்டிங் பட்டியலில் முதலிடத்தில் தொடரும் சூர்யகுமார் யாதவ்

தினத்தந்தி
|
21 March 2024 12:41 AM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவர் கிரிக்கெட்டுக்கான டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவர் கிரிக்கெட்டுக்கான டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் (861 புள்ளி) முதல் இடத்தில் தொடர்கிறார். 2வது இடத்தில் பில் சால்ட் (802 புள்ளி), 3வது இடத்தில் முகமது ரிஸ்வான் (800 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.

மற்றபடி இந்தியா தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (714 புள்ளி) 5வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசைல் ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 4 இடம் ஏற்றம் கண்டு 645 புள்ளிகளுடன் மிட்செல் சாண்ட்னெருடன் 9வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் அடில் ரஷீத் (726 புள்ளி) உள்ளார். 2வது மற்றும் 3வது இடங்களில் முறையே வனிந்து ஹசரங்கா (687 புள்ளி), அகெல் ஹூசைன் (664 புள்ளி) ஆகியோர் உள்ளனர். இந்த பட்டியலில் இந்தியா தரப்பில் அக்சர் படேல் (660 புள்ளி) 4வது இடத்திலும், ரவி பிஷ்னோய் (659 புள்ளி) மகேஷ் தீக்சனாவுடன் இணைந்து 5வது இடத்திலும் உள்ளனர்.

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ஷகிப் அல் ஹசன் (240 புள்ளி) முதல் இடத்திலும், வனிந்து ஹசரங்கா (228 புள்ளி) 2ம் இடத்திலும், முகமது நபி (218 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா (185 புள்ளி) 7வது இடத்தில் உள்ளார்.

மேலும் செய்திகள்