< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை: டாப் 5 இடங்களில் 2 இந்திய வீரர்கள்

image courtesy: AFP

கிரிக்கெட்

ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை: டாப் 5 இடங்களில் 2 இந்திய வீரர்கள்

தினத்தந்தி
|
1 Aug 2024 8:50 PM IST

டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.

துபாய்,

இந்தியா - இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதன் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் முதல் 3 இடங்களில் முறையே டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ் மற்றும் பில் சால்ட் ஆகியோர் மாற்றமின்றி தொடருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்திய இளம் வீரரான ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். டாப் 5 இடங்களில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜெய்ஸ்வால் இடம்பிடித்து பெருமை சேர்த்துள்ளனர். இந்த வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட் 8-வது இடத்தில் தொடருகிறார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ரவி பிஷ்னோய் (8-வது இடம்) மீண்டும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த வனிந்து ஹசரங்கா மோசமான செயல்பாடு காரணமாக 4-வது இடத்திற்கு சரிந்துள்ளார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் செய்திகள்