நடுவரிடம் தகாத வார்த்தையில் பேசிய ஆரோன் பிஞ்ச்- ஐசிசி கண்டனம்- வைரல் வீடியோ
|ஆரோன் பிஞ்ச் நடுவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் டி-20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், 9 ஆவது ஓவரில் டிஆர்எஸ் முறையில் குழப்பம் ஏற்பட்டதால் நடுவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.
அந்த ஓவரின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லருக்கு பேட்டில் பந்து ஊரசியது போல இருந்தது. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டனர். அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நடுவரிடம் ஆரோன் பிஞ்ச் முறையிட்டார். அப்போது தகாத வார்த்தையில் பேசினார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது.
இதன் மூலம் ஆரோன் பின்ச் ஐசிசி நடத்தை விதி 2.3ஐ மீறியிருக்கிறார். பின்ச் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனால் ஐசிசி இவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவரது நன்னடத்தையில் புள்ளிகள் குறைந்துள்ளது.
கடந்த 2 வருடங்களில் இந்த சம்பவம் பின்ச்சின் முதலாவது என்றாலும் இனி தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இதுமாதிரி நடந்தால் பின்ச் போட்டிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் என்று ஐசிசி அறிவித்துள்ளது.