< Back
கிரிக்கெட்
ஐசிசி தரவரிசை: இந்திய வீரர் சுப்மன் கில் 2வது இடத்துக்கு முன்னேற்றம்
கிரிக்கெட்

ஐசிசி தரவரிசை: இந்திய வீரர் சுப்மன் கில் 2வது இடத்துக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
13 Sept 2023 2:36 PM IST

ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் சுப்மன் கில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் சுப்மன் கில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் இந்திய வீரர் விராட் கோலி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்தார்.இதனால் அவர் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் செய்திகள்