< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐசிசி தரவரிசை: இந்திய வீரர் சிராஜ் முதலிடத்திற்கு முன்னேற்றம்
|20 Sept 2023 2:38 PM IST
ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டார். இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இதனால் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசில்வுட் 2வது இடத்திலும் , நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் 3வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 9வது இடத்தில் உள்ளார்.