< Back
கிரிக்கெட்
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசை - முதலிடம் பிடித்த நியூசிலாந்து வீரர்...!
கிரிக்கெட்

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசை - முதலிடம் பிடித்த நியூசிலாந்து வீரர்...!

தினத்தந்தி
|
5 July 2023 4:55 PM IST

ஆஷஸ் 2வது டெஸ்ட் நிறைவடைந்ததையடுத்து டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

துபாய்,

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 883 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2 முதல் 4 இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (882 புள்ளி), மார்னஸ் லபுஸ்சாக்னே (873 புள்ளி), டிராவிஸ் ஹெட் (872 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.

இந்திய தரப்பில் ரிஷப்பண்ட் 10 வது இடத்திலும் ரோகித் சர்மா 12 வது இடத்திலும், விராட் கோலி 14வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஷ்வின், கம்மின்ஸ், ரபாடா ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். பும்ரா 8வது இடத்திலும், ஜடேஜா 9வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் ஆஸ்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களில் ஜடேஜா, அஷ்வின், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் உள்ளனர். இந்தியாவின் அக்சர் படேல் 5வது இடத்தில் உள்ளார்.



மேலும் செய்திகள்