ஐசிசி தரவரிசை; ஒருநாள் பேட்டிங்கில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய பாபர் ஆசம்..!
|கிரிக்கெட் வீரர்களின் ஒருநாள் மற்றும் டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம் வகித்த சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் ஆசம் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். 2 முதல் 4 இடங்களில் சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளனர்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்திலும் ஜோஷ் ஹேசில்வுட் 2ம் இடத்திலும், முகமது சிராஜ் 3ம் இடத்திலும் உள்ளனர். ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன், முகமது நபி, சிக்கந்தர் ராசா ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் அடில் ரஷித் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். ரஷித் கான் 2ம் இடத்திலும், ரவி பிஷ்னோய் 3ம் இடத்திலும், வனிந்து ஹசரங்கா 4ம் இடத்திலும், மகேஷ் தீக்சனா 5ம் இடத்திலும் உள்ளனர்.
டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் சூர்யகுமார் யாதவும், 2ம் இடத்தில் முகமது ரிஸ்வானும், 3ம் இடத்தில் எய்டன் மார்க்ரமும் உள்ளனர். டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன், முகமது நபி, எய்டன் மார்க்ரம் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.