< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நடுவரை விமர்சித்ததற்காக நிகோலஸ் பூரனுக்கு அபராதம்
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நடுவரை விமர்சித்ததற்காக நிகோலஸ் பூரனுக்கு அபராதம்

தினத்தந்தி
|
8 Aug 2023 12:40 AM IST

நிகோலஸ் பூரனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கயானா,

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று முன் தினம் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் போது, நடுவரை விமர்சித்த குற்றத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான நிகோலஸ் பூரணுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அவர் லெவல் 1 ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக பூரனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்