< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி.யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் - வீராங்கனை விருது: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு

image courtesy: ICC

கிரிக்கெட்

ஐ.சி.சி.யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் - வீராங்கனை விருது: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு

தினத்தந்தி
|
6 May 2024 2:24 PM IST

ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் நமீபிய வீரரான எராஸ்மஸ், யு.ஏ.இ. வீரரான முகமது வாசிம் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாகீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட், வெஸ்ட் இண்டீஸ் கேப்டனான ஹேலி மேத்யூஸ் மற்றும் இலங்கை அணியின் கேப்டனான சமாரி அதபத்து ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்