< Back
கிரிக்கெட்
ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; இந்திய வீரர் சுப்மன் கில் தேர்வு...!!

image courtesy; twitter/@ICC

கிரிக்கெட்

ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; இந்திய வீரர் சுப்மன் கில் தேர்வு...!!

தினத்தந்தி
|
13 Oct 2023 2:46 PM IST

ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவை சேர்ந்த சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்து இருந்தது.

அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மன் கில் ,முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அதில் சிராஜ் மற்றும் மலானை பின்னுக்கு தள்ளி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கில் செப்டம்பர் மாதம் மட்டும் 80 சராசரியுடன் 480 ரன்கள் எடுத்துள்ளார்.

அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீராங்கனைகளான லாரா வோல்வார்ட் மற்றும் நாடின் டி கிளர்க்கும், இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்தும் இடம் பெற்றிருந்தனர்.

அதில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்