< Back
கிரிக்கெட்
ஐசிசி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; பரிந்துரை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்..!

image courtesy; twitter/@BCCI

கிரிக்கெட்

ஐசிசி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; பரிந்துரை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்..!

தினத்தந்தி
|
7 Nov 2023 12:45 PM IST

ஐசிசி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் மாதம் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டி காக் மற்றும் தனது அறிமுக உலகக்கோப்பை தொடரிலேயே அசத்திவரும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஹேலி மேத்யூஸ், வங்காளதேசத்தை சேர்ந்த நஹிடா அக்டர் மற்றும் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்