< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய ஆல்-ரவுண்டர்
|5 Aug 2024 2:51 PM IST
ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் மற்றும் இந்திய ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.