< Back
கிரிக்கெட்
ஐசிசி-யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருது; பாகிஸ்தான் வீரர் தேர்வு

image courtesy; ICC

கிரிக்கெட்

ஐசிசி-யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருது; பாகிஸ்தான் வீரர் தேர்வு

தினத்தந்தி
|
12 Sept 2023 5:31 PM IST

ஐசிசி-யின் ஆகஸ்ட் மாததிற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வென்றுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்திருந்தது.

அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், மற்றொரு பாகிஸ்தான் வீரரான ஷதாப் கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாபர் இந்த விருதை 3-வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு புதுமுக வீராங்கனைகள் பரிந்துரை பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். அதில் நெதர்லாந்தை சேர்ந்த ஐரிஸ் ஸ்வில்லிங், மலேசிய வீராங்கனை ஐன்னா ஹமிசா ஹாஷிம் மற்றும் அயர்லாந்தை சேர்ந்த அர்லீன் கெல்லி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அயர்லாந்தை சேர்ந்த அர்லீன் கெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்